உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

266.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 ஊன்விழைந் துண்ணா தோம்புக உயிரை

உயிர்க ளோம்புமி னூன்விழைந் துண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்ற மிகந்தொரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு மதிகள் போல 'மறுவிலிர் தோன்றுவீர்.

வளையாபதி 21, 22, 23

ஊனுண வொழித்தவர் வானவர் ஆவார்

267. ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைதல் நன்றோ ஊன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுறைதல் நன்றோ ஊன்றியிவ் விரண்டி னுள்ளு முறுதீநீ யுரைத்தி டென்ன ஊன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான்.

புலவுணக் கொடுநோய் பூத்தெழும் பந்துபோல்

268. வெந்தடி தின்ற வெந்நோய் வேகத்தான் மீட்டு மாலைப் பைந்தொடி மகளி ராடும் பந்தென வெழுந்து பொங்கி வந்துடைந் துருகி வீழ்ந்து மாழ்குபு 2கிடப்பர் கண்டாய் கந்தடு வெகுளி வேகக் கடாமுகக் களிற்று வேந்தே.

-சீவகசிந்தாமணி 1235, 2765

29. தவம்

(“உள்ளம் புலன்வழி செல்லாமல் அடங்கித் தன் வயப்பட்டு நிற்றற் பொருட்டு உண்டி சுருக்கலும், கடுவெயிலில் நிற்றலும், கடும்பனியில் நிற்றலும், கடுமழையில் நிற்றலும் முதலிய செயல் களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களுக்குத் துன்பம் நேரிடாது அவற்றைப் பாதுகாத்தல்” - நாகை. சொ. தண்ட.

இ.பெ.அ: திருக். 27. ப.பா.தி. 35.)

1. மறுவிலர்.

2. கிடப்பக்.