உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

சமனிலை பேணும் சால்பே தவமாம் 269. தத்தமக்குக் கொண்ட 'குறியே தவமல்ல செத்துக சாந்து படுக்கமன - மொத்துச் 2சகத்தனாய் நின்றொழுகுஞ் சால்பு தவமே நுகத்துப் பகலாணி போன்று.

இன்னா செயாமை இனிய தவமாம்

133

பழமொழி 339

270. உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கட்செய் யாமை - 3செயிர்நோய் விழைவு வெகுளி யிவைவிடுவ னாயின் 4இழவன் றினிது தவம்.

- சிறுபஞ்சமூலம் 31

தூய்மையும் வாய்மையும் தோய்வது தவமாம்

271. தூய்மை யுடைமை துணிவாந் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றுந் தவத்திற் றருக்கினார் கோள்.

தாக்கும் துயரை நீக்குதல் தவமாம்

திரிகடுகம் 78

272. ஊக்கித்தாங் கொண்ட விரதங்க ளுள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால் நீக்கி நிறூஉ முரவோரே நல்லொழுக்கங் காக்குந் திருவத் தவர்.

தவநெறி முன்னர்த் தங்கா தவநெறி 273. விளக்குப் புகவிருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின்முன் னில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாந் தீது.

-நாலடியார் 57, 51

1. குறியோ.

2. சமத்தனாய்.

3. செயிர்தோய்.

4. இழிவன்.