உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

283.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 'இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே.

-புறநானூறு 358, 252

எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை

வரிக்கடை நெடுங்கண் விளங்க 2மேதக மணித்தோடு பெய்து வாண்முகந் திருத்தி நானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய கான்யாற்று வருபுன லாடலுந் தேமலர் வல்லிப் பந்தர் வண்டுவா ழொருசிறை நிலமகட் புணருஞ் சேக்கையு மரமுதல் மெல்லுரி வெண்டுகி லுடையுந் தொல்வகைப் படையுழா விளையுளி னுணவு மந்திரத்துச் சுடர்முதற் குலமுறை வளர்த்தலும் வரையாது வருவிருந் தோம்புஞ் செல்வமும் வரைமுதற் காடுகைக் கொள்ளு முறையுளு மென்றிவ் வெண்வகை மரபி னிசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனை காக்கு மாற்றலொடு வென்றுவிளங்கு 'தவத்தி னரசியற் பெருமை மாக்கட லுடுத்த வரைப்பின்

3

யார்க்கினி தன்றஃ தறியுநர்ப் பெறினே.

30. கூடாவொழுக்கம்

-ஆசிரியமாலை

("தாம் விட்ட காம இன்பத்தை உரனின்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாதாய தீய ஒழுக்கம்" - பரிமே. "கூடா ஒழுக்கம் என்பது 'கொல்லா நலம்' 'பொய்யா ஒழுக்கம்' என்பன போல கூடாமை யாகிய ஒழுக்கம் என்னும் பொருள்பட நின்றது. கூடுதலாவது சிற்றின்பச் சேர்க்கை. கூடாமையாவது அச்சேர்க்கை ஒழிதல்” - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 28)

1. இல்விளங்கு.

2. மேதகு.

3. தாழ்க்கு.

4. தவத்தினரரசியற்.