உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வேதனை மரங்கள் நாறி

வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலுங் களிப்பு மென்னுங்

கவடுவிட் டவலம் பூத்து மாதுய ரிடும்பை காய்த்து

மரணமே 'கனியு மன்றே.

இறந்த நாளை எவரே மீட்பார்

385. பிறந்துநாம் பெற்ற வாழ்நா

386.

ளித்துணை யென்ப தொன்றும்

அறிந்திலம் வாழ்து மென்னு

மவாவினு எழுந்து கின்றாம்

கறந்துகூற் றுண்ணு ஞான்று

2கண்புடைத் திரங்கி னல்லால்

இறந்தநாள் யாவர் மீட்பா

ரிற்றெனப் பெயர்க்க லாமோ.

குடிசை பிரியுமுன் கொடுத்துண நினைமின்!

உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட் டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக் குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர்.

அச்சிறும் முன்னர் அறிவோ டூர்மின்

387. உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்தல் தேற்றா 3திழந்தார் பலரா 4லிடும்பைநீர் யாற்றுள் அழுந்துமா லப்பண்டி யச்சிறா முன்னே 5கொளுஞ்சீலங் கூலியாக் கொண்டூர்மின் பாகீர்.

163

-சீவகசிந்தாமணி 1389,2616, 2620,2621

1. கனிந்து நிற்கும்.

2. கண்புதைத்.

3. திகழ்ந்தார்.

4. யிடும்பைநீர்.

5. கொழுஞ்சீலங்.