உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அழியும் பொருள்கட் கழிதல் வேண்டா

388. போதர வுயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனும் ஊதிய மென்று கொள்வ ருணர்வினான் மிக்க நீரார் ஆதலா னழிதன் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா காதலா லழுது மென்பார் கண்ணனி களைய லுற்றார்.

389.

கூற்றுவன் இரக்கம் கொள்வதோ இல்லை

அரவின மரக்க ராளி

யவைகளுஞ் சிறிது தம்மை

மருவினாற் றீய வாகா

வரம்பில்கா லத்து ளென்றும்

பிரிவில மாகித் தன்சொற்

பேணியே யொழுகு நங்கட்

கொருபொழு திரங்க மாட்டாக்

1

'கூற்றின்யா ருய்து மென்பார்.

நாளும் நாளும் நாமே சாகிறோம்

390. பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங் காளையாந் தன்மை செத்துங் காமுறு மிளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி

391.

2

நாளுநாட் சாகின் றாமால் நமக்குநா மழாத தென்னோ.

குறுகிய நாளெலாம், கூற்றுவன் வாளே

கோள்வலைப் 3பட்டுச் சாவாங்

கொலைக்களங் குறித்துச் சென்றே

மீளினு மீளக் கண்டு

மீட்சியொன் றானு மில்லா

நாளடி யிடுதல் தோன்று

நம்முயிர் பருகுங் கூற்றின்

வாளின்வாய்த் தலைவைப் பாக்குச்

செல்கின்றோம் வாழ்கின் றோமோ.

1. கூற்றையா.

2. றோமால்

3. பட்டுஞ்.

-குண்டலகேசி 7-10