உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தோற்றம் பின்னே காத்தல் முன்னே

392. உள்ளது கரக்குமிக் கள்ள யாக்கை

மேம்படு குற்ற மூன்றொடு வழங்கலின் உண்டிநல் லரசு தண்டத்தின் வகுத்த நோன்பிணி யகப்பட் டிருப்பினுந்

தோன்றுவது பின்னர்க் காப்பது முன்னே.

40. பல்வகை நிலையாமை

165

ஆசிரியமாலை

(செல்வம், இளமை, யாக்கை என்பன அன்றிப் பல்வேறு நிலையாப் பொருள்களும் உள. அவற்றை யெல்லாம் ஒருங்கறிந்து, நிலைபேறு அடையத் தக்க வழியை நாடுதற்காகப் பல்வகை நிலையாமை கூறப்பெற்றது.

இ.சா.அ: திருக். 34. ப.பா.தி. 37. நீதிக். 71 (நிலையாமை)) "நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

393. சாவாத வில்லைப் பிறந்த வுயிரெல்லாந்

தாவாத வில்லை வலிகளும் - மூவா

இளமை யியைந்தாரு மில்லை வளமையிற்

கேடின்றிச் சென்றாரு மில்.

-நான்மணிக்கடிகை 77

நிலையா தவற்றை நினைப்பிற் களிப்பரோ?

394. பலதிரண்ட செல்வத்தைப் பார்க்கிற் கனாவாம் மலர்திரண்டாற் போலிளமை வாடுஞ் - சிலநிகழ்ந்த மின்னொக்கும் வாழ்நா ளிவையிற்றை மெய்யென்றிட் டுன்னிக் களிப்பா ருளர்.

1. மெய்படு.

2. திளமை.

-பாரதம்