உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வெங்கோன்மை 'வேந்தர்கண் வேண்டுஞ் சிறிதெனினுந்

தண்கோ 'லெடுக்குமா 3மெய்.

குடிகள் உயர்ந்தால் கோலும் உயரும்

-பழமொழி 250

477.

478.

வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்

-

நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் 'கோவுயர்தல் ஓவா துரைக்கு முலகு.

குடிநடுக் காமை கொற்றவற் கழகு

கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல் - பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு

வாட்டானன் றென்றல் வனப்பு.

-சிறுபஞ்சமூலம் 46, 9

ஆள்வோன் மடியின் அறமும் அழியும்

479. பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல் - °விரும்பான் ஒருநாள் மடியி னுலகின்மே னில்லா திருநால் வகையா ரியல்பு.

480.

தன்னை ஓம்பான்; மன்னுயிர் ஓம்புவான்

ஒள்வா ளமரு ளுயிரோம்பான் தானீயக் கொள்வார் நடுவட் கொடையோம்பான் கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான் ஒழியாமே யோம்பு முலகு.

வெள்வாள்

-புறப்பொருள் வெண்பாமாலை 178, 195

1. வேந்தன்கண்.

2. லெடுப்புமா.

3. மொய். 4. கோவுயரும்.

5. மென்றுணர்த்தல்.

6. விரும்பா தொருநாள்.