உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நாடுக 'தான்செய்த நுட்பத்தைக் கேளாதே யோடுக வூரோடும் ஆறு.

வாய்த்தவர் கண்டது வானகம் ஆகும்

531. ஓதநீர் வேலி யுலகத்தா 'ரிந்நெறி

532.

533.

காதல ரென்ப தறிந்தல்லால் - யாதொன்றுங் கானக நாட பயிலார் 3பயின்றதூஉம் வானக மாகி விடும்.

இனங்கழு வேற்றிய இழிசெய லில்லை

மனங்கொண்டக் கண்ணு மருவில செய்யார் கனங்கொண் டுரைத்தவை காக்கவே வேண்டும் சனங்க ளுவப்பன செய்யாவுஞ் செய்க இனங்கழு வேற்றினா ரில்.

அளறு படியினும் அருமணி மணியே

இணரோங்கி வந்தாரை யென்னுற்றக் கண்ணும் உணர்பவ ரஃதே யுணர்ப - உணர்வார்க் கணிமலை நாட அளறாடிக் கண்ணு மணிமணி யாகி விடும்.

எடுத்த செயலைத் தொடுத்து முடிக்க

534. கற்றதொன் றின்றி விடினுங் கருமத்தை அற்ற முடிப்பா னறிவுடையான் - உற்றியம்பும் நீத்தநீர்ச் சேர்ப்ப இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன்.

201

பழமொழி 26, 7, 195, 398,188, 72, 150

நுண்ணிய விழையும் நூலவர் நோக்கு

535. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை

1. தான்கண்ட.

2. ரந்நெறி.

3. பயின்றது.