உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

527.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 அறவுரை கேட்டுணர்ந் தஞ்ஞானம் 'நீக்கித் துறவுரை கேட்ப செவி,

பிறவி மீட்கும் பெருந்திரு வாளர் மறவுரையுங் காமத் துரையு மயங்கிப் பிறவுரையு மல்கிய ஞாலத் தறவுரையைக் கேட்குந் திருவுடை யாரே பிறவியை

மீட்குந் திருவுடை யார்.

50. அறிவுடைமை

-அறநெறிச்சாரம் 167, 168, 2

உண்மை

("கல்வி கேள்விகளினால் ஆய அறிவோடு உ அறிவுடையனாதல்” - பரிமே.

இ.பெ.அ: திருக். 43. நாலடி. 25. பழமொழி. 4. நீதிக். 21.

இ.சா.அ: நாலடி. 26 (அறிவின்மை))

அறிவு மாட்சியே அனைத்து மாட்சியும்

528. அறிவினான் மாட்சியொன் றில்லா வொருவன் பிறிதினான் மாண்ட தெவனாம் - பொறியின் மணிபொன்னுஞ் சாந்தமு மாலையுமற் றின்ன அணியெல்லாம் 3ஆடையின் பின்.

புலமிக் கவர்க்கே புலமை புலனாம்

529. புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே 4பாம்பறியும் பாம்பின கால்.

பல்கால் ஆய்க பயின்ற நுண்மையை

530. செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது நில்லற்க நீத்தார் நெறியொரீஇப் - பல்காலும்

1. நீக்கி துறவுரைவிட்ட.

2. மாலையு மின்ன. 3. ஆடையிற். 4. பாம்பறியு மேபாம்பின்.