உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

சலவருட் சாலச் சலமே நலவருள்

நன்மை வரம்பாய் விடல்.

203

-நாலடியார் 248, 249, 244, 245, 188

பிறழா தென்றும் பெரியோர் வாய்ச்சொல்

541. இம்மூ வுலகி லிருள்கடியு மாய்கதிர்போல் அம்மூன்று முற்ற 1வுணர்தலால் - 2தம்முள் உறழா மயங்கி யுறழினு மென்றும்

பிறழா பெரியார்வாய்ச் சொல்.

-புறப்பொருள் வெண்பாமாலை 167

அறிவுக் கில்லை இளமையும் முதுமையும்

542. இயைர் முதிய ரெனவிருபால் பற்றி

விளையு மறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்றாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தா னுளன்.

-பெரும்பொருள் விளக்கம்.

51. குற்றங் கடிதல்

"ஐம்பெருங் குற்ற மென்றும் அறுவகை உட்பகை என்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம் அரசனும் பிறரும் தங்கண் நிகழாதவாறு விலக்குதல்” – பாவாணர்.

இ.பெ.அ: திருக். 44.)

அழியா அரசின் அமைதி இவைகாண்

543. போகம் பொருள்வேட்கை மான்வேட்டம் பொல்லாக்கள் சோகம் படுசூதே சொல்வன்மை - சோகக் கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின் அடுங்கதமி லேனை யரசு.

1. வறிதலால்.

2. தம்மின்.

3. ரெனவிருபாற்.

4. பொருட்கேடு.