உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஊனம் தீர்ந்தவர் ஓதிய உரைகள்

544. ஆர்வமே செற்றங் கதமே யறையுங்கால் ஓர்வமே செய்யு முலோபமே - சீர்சாலா மானமே மாய `வுயிர்க்கூன மென்னுமே ஊனமே தீர்ந்தவ ரோத்து.

தனது நெய்யில் தானே பொரிதல்

545. அச்ச மலைகடலிற் றோன்றலு மார்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையுங் - கட்டிய மெய்ந்நிலை காணா வெகுளியு மிம்மூன்றுந் தந்நெய்யிற் றாம்பொரியு மாறு.

-ஏலாதி 18, 61

செல்வம் உடைக்கச் சேர்ந்திணை படைகள் 546. தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை.

குற்றந் தரூஉம் கொடும்பகை மூன்று 547. அற்புப் பெருந்தளை யாப்பு 'நெகிழ்ந்தொழுகல் கற்புப் பெரும்புணை 3காதலிற் கைவிடுதல் நட்பு நயநீர்மை நீங்க லிவைமூன்றுங் குற்றந் தரூஉம் பகை.

548.

-திரிகடுகம் 65, 38, 86

கற்றேய்ந் திடினும் சொற்றேய்ந் திடாது கெடுவ லெனப்பட்டக் கண்ணுந் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய

கற்றேயுந் தேயாது சொல்.

1. முயிர்க்கூன.

2. நெகிழ்ந்தொழிதல்.

3. (க்) காதலியைக்.