உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பொருந்தாப் பழியோர் பொல்லாப் பிணியாம்

549. பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்திற்

றணியாது விட்டக்கால் தண்கடற் சேர்ப்ப 'பிணியீ டழித்து விடும்.

205

பழமொழி 39, 40

செம்மை நினையார் சேறும் நெறிகள்

550. காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல் ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதிற் சினையாமை வைகுந் திருநாட செம்மை நினையாமை பூண்டார் நெறி.

-நளவெண்பா. 208

கோவே செய்யினும் குற்றம் குற்றமே

551. மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே யன்று வாய்மை

நண்ணினார் திறத்துங் குற்றங் குற்றமே நல்ல வாகா விண்ணுளார் புகழ்தற் கொத்த

விழுமியோ னெற்றி போழ்ந்த

கண்ணுளான் கண்டந் தன்மேற்

கறையையார் கறையன் றென்பார்.

-குண்டலகேசி 17

52. பெரியாரைத் துணைக்கோடல்

"தம்மின் முதிர்ந்த அறிவுடையாரைத் தமக்குத்துணையாகக்

கொள்ளுதல்” - மணக்; பரிப்.

1.பிணிபீ.

இ. பெ.அ: திருக். 45. ப.பா.தி.52

இ.சா.அ: நாலடி. 18. நீதிக். 56. (நல்லினஞ் சேர்தல்)