உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

செறியெயிற் றாளி வேழப்

219

பேரினஞ் செகுத்த தன்றே

உறுபுலி யொன்று தானே

கலையின முடற்றிற் றன்றே.

-சீவகசிந்தாமணி 814

57. கால மறிதல்

(“வினை செய்தற்காம் காலம் அறிதல்' - மணக். பரிப்.

இ.பெ.அ: திருக். 49.

இ.சா.அ: ப.பா.தி. 42 (காலத்தின் அருமை))

காலம் அறிந்து கடமை புரிக

604. அன்பி னெகிழ வழிபட்டுக் கொள்ளாது நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே கன்றுவிட் டாக்கறக்கும் போழ்திற் கறவானாய் அம்புவிட் டாக்கறக்கு மாறு.

விரைந்து செய்தலும் விளைக்கும் கேடு

605. புரையக் கலந்தவர்க் கண்ணுங் கருமம் உரையின் வழுவா துவப்பவே கொள்க வரைய நாட விரையிற் கருமம்

சிதையும் இடராய் விடும்.

பழமொழி 166, 164

அடக்க மாக ஆள்வினை புரிக

606. ஆற்றுந் துணையும் அறிவினை யுள்ளடக்கி ஊற்ற முரையா ருணர்வுடையார் - ஊற்றம் உறுப்பினா லாராயு மொண்மை யுடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

1. கலையுமுன் னுடற்றிற்.

-நாலடியார் 196