உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந் தறங்கள் வௌவ அதன்புறங் காக்கலார்.

பகைவரை வணக்கும் பான்மை உ

235

-சீவகசிந்தாமணி 248

உவப்பாம்

669. ஆறிலொன் றறமென வருளி னல்லதொன் றூறுசெய் துலகினு ளுவப்ப தில்லையால் மாறிநின் றவரையும் வணக்கி னல்லது சீறிநின் 'றவருயிர் செகுப்ப தில்லையே.

செருபடைக் கொடுமை செங்கோற் கில்லை

670. நாமவேல் நரபதி யுலகங் காக்குநாள்

காமவேள் கவர்கணை 2கலத்த லல்லது தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை ஏமநீர் வரைப்பகத் தியைந்த தில்லையே.

வாட்டுந் துயரறின் வானுல காகும்

671. குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியும் நீர்சூழ் படிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார் முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி அடிமிசை யறையுஞ் செம்பொ னலர்கழ லரச ரேறே.

-சூளாமணி 54, 53, 209

உழுபடை யன்றி எழுபடை இல்லை

672. இருமுந்நீர்க் குட்டமும்

வியன்ஞாலத் தகலமும்

வளிவழங்கு திசையும்

வறிதுநிலைஇய காயமும், என்றாங்

கவையளந் தறியினு மளத்தற் கரியை அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயொடு

செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது

1. றெவரையுஞ்.

2. கனற்ற.