உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வெய்ய ஆட்சியில் வையகம் வெதும்பும்

682. நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டே மறந்தலை மயங்கு செவ்வேல் மன்னவன் வெய்ய னாயின் அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே.

239

-சூளாமணி 265, 263

வெண்குடை வெதுப்பின் தண்குடை யுண்டோ?

683. மண்குளிர கொள்ளக் காக்கு

மரபொழிந் தரசர் தங்கள் விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயின்

கண்குளிர் கொள்ளப் பூக்குங்

கடிகயத் தடமுங் காவும்

தண்குளிர் கொள்ளு மேனுந்

தான்மிக வெதும்பு மன்றே.

முறையோ டணுகின் நிறையும் வளமே

684. காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு 'வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்த நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்கபுலம் போலத்

தானு முண்ணா னுலகமுங் கெடுமே.

-FGTITLOGOO 264

1. வாயினு மிதித்துப்புக்.

2. பரிவுதபக் கொள்ளும்.

-புறநானூறு 184