உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வேந்தன் பணிக்கின் வேலினும் வீழ்க 794. எமரிது செய்தக வெமக்கென்று வேந்தன் தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு வேலின்வா யாயினும் 'வீழ்வார் மறுத்துரைப்பின் ஆலென்னிற் பூலென்னு மாறு.

இருந்து பெறுவதைக் கிடந்தும் பெறலாம் 795. சிறிதாய கூழ்பெற்றச் செல்வரைச் சேர்ந்தாற் பெரிதாய கூழும் பெறுவர் - 2அரிதாம் இடத்து ளொருவ னிருப்புழிப் பெற்றாற் கிடப்புழியும் பெற்று விடும்.

எருது எழுமுன் எழுமோ வண்டி? 796. ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத் தாற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள் வழாஅமைக் காத்தோம்பி வாங்குமெருத்தும் எழாஅமைச் சாகா டெழல்.

பழமொழி 272, 271, 274, 268, 190, 313

செவ்வியா னுரைத்தால் செழுநலம் சேரும்

797. சிறப்புடை மன்னரைச் செவ்வியா னோக்கித் திறத்தி னுரைப்பார்க்கொன் றாகாத தில்லை விறற்புகழ் மன்னர்க் குயிரன்ன ரேனும் புறத்தமைச்சி னன்றகத்துக் கூன்.

798.

பழமொழி 275

உழைப்படு மாயின் உறுபயன் எய்தலாம்

மன்னர் திருவு மகளி ரெழினலமுந்

துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்

குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்

உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.

1. வீழார்.

2. சிறிதாம்.

3. மெருதாங்(கு).

-நாலடியார் 167