உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தலைவன் முன்னே தவிர்க்கத் தக்கவை 799. கடைவிலக்கிற் காயார் கழிகிழமை 'செய்யார் கொடையளிக்கட் பொச்சாவார் கோலநேர் செய்யார் இடையறுத்துப் போகிப் பிறனொருவற் சேரார் 2கடைபெருகி வாழ்துமென் பார்.

விரும்பிய சொல்லின் விழைந்தவை பெறுவார் 800. முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார் தனிமை யிடத்துக்கண் தங்கருமஞ் சொல்லார் இனியவை யாமறிது மென்னார் கரிதன்று காக்கைவெள் ளென்னு மெனின்.

பெரியார் அவையிற் பேணத் தகாதவை

801. 3உமிவு முயர்ந்துழி யேறலும் பாகும் வகையி லுரையும் வளர்ச்சியு மைந்தும் புணரார் பெரியா ரகத்து.

குணத்தோர் அவையிற் கூறத் தகாதவை

802. இறைவர்முற் செல்வமுங் கல்வியுந் தேசும் ‘குலனுங் குணனுடையார் கூறார் பகைவர்போற் பாரித்து பல்காற் பயின்று.

269

-ஆசாரக்கோவை 66, 69, 70, 71

நிலைமை யறிந்து நெறியோ டமைக

803. நின்றக்கால் நிற்க வடக்கத்தா லென்றும் இருந்தக்கா லேவாமை 5யேறார் - பெருந்தக்கார் சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும் வினாவற்க சொல்லொழிந்தக் கால்.

1. பேசார்.

2. கடைபோக.

3.உமிழ்வு.

4. குணனுங் குலனுடையார்.

5. யேகார்.