உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பெரியரின் முன்னர்ப் பிறிதெதும் நோக்கேல்

804. தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார் எம்மேனி யாயினு நோக்கார் தலைமகன் தன்மேனி யல்லாற் பிற.

ஒட்டுக் கேட்டல் உறுதுயர் ஆக்கும்

805. பிறரொடு மந்திரங் கொள்ளா ரிறைவனைச் சாரார் செவியோரார் 'சாரிற் பிறிதொன்று தேர்வார்போல் நிற்க திரிந்து.

செல்லலும் சொல்லலும் செவ்விதாய்ப் பேணுக 806. 2நிரைபடச் செல்லார் நிழல்மிதித்து நில்லார் உரையிடைப் பாய்ந்துரையா ரூர்முனிவ செய்யார் அரசர் படையளவுஞ் சொல்லாரே யென்றும் புரைதீர்ந்த காட்சி யவர்.

அரசை விஞ்சி அறமுஞ் செய்யேல்

807. அறத்தொடு கல்யாண மாள்வினை கூரை இறப்பப் பெருகியக் கண்ணுந் - திறப்பட்டார் மன்னரின் 3மேம்படச் செய்யற்க செய்பவேல் மன்னிய செல்வங் கெடும்.

இளைய வென்ன எள்ளத் தகாதவை

808. அளையுறை பாம்பு மரசு நெருப்பும் முழையுறை சீயமு மென்றிவை நான்கும் இளைய வெளிய பயின்றனவென் றெண்ணி இகழி னிழுக்கந் தரும்.

-ஆசாரக்கோவை 74, 77, 78, 83, 85, 84

76. குறிப்பறிதல்

(“பிறர் எண்ணத்தை அவர் கூறா முன்னமே குறிப்பால் அறிதல்” - கா.சு.

1. சாற்றிற்.

2. நிரல்படச்.

3. GLOBULL.