உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ் வளம் 17 சிறிய மங்கையர் தேயு மருங்குலே வெறிய வும்மவர் மென்மலர்க் கூந்தலே.

குற்றம் இன்மையாற் கூற்றமும் இல்லை 840. கூற்ற மில்லையொர் குற்ற மிலாமையாற் சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செம்மையால் ஆற்ற நல்லற மல்லதி லாமையால்

ஏற்ற மல்ல திழித்தக வில்லையே.

ராமா. பால. 72, 71

மீனெலாம் களிக்கத் தேனெலாம் ஒழுகும்

841. ஆலைவாய்க் கரும்பின் தேனு

மரிதலைப் பாளைத் தேனுஞ்

'சோலைவாய்க் கனியின் தேனுந்

2தொடையிழி யிறாலின் தேனும்

மாலைவா 3யுகுத்த தேனும்

வரம்பிகந் தோடி வங்க

வேலைவாய் மடுப்ப 4உண்டு

மீனெலாங் களிக்கு மாதோ.

நோக்கிய இடமெலாம் நீக்கமில் வளமை

842. வரம்பெலா முத்தந் தத்து

மடையெலாம் பணில மாநீர்க்

குரம்பெலாஞ் செம்பொன் மேதி

குழியெலாங் கழுநீர்க் கொள்ளை

பரம்பெலாம் பவளஞ் 5சாலிப்

பரப்பெலா மன்னம் பாங்கர்க்

கரும்பெலாஞ் செந்தேன் சந்தக் காவெலாங் களிவண் டீட்டம்.

1. சோலைவீழ்.

2. தொடையளி.

3. யுக்க. 4. C616060.

5. சோலைப்.