உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

846.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புலம்பா வுறையுள் நீதொழி லாற்றலின் விடுநிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென

அருவி யற்ற பெருவறற் காலையும்

'நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேர்யாற்றுச்

சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர் உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச லல்லது

வெம்மை யறியாநின் னகன்றலை நாடே.

ஏரோர் களவழி இனிது வாழிய

-பதிற்றுப்பத்து 28

தாமரை வெண்கிழங்கு விரவி யோராங்குக் கருமலங்கு மிளிரக் கொழுமுகந் 'தியக்கி பழஞ்சேற்றுப் பரப்பிற் பருமுத லெடுத்து நெடுங்கதி ரிறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து வாளிற் றுமித்த சூடே மாவின்

சினைகளைந்து பிறக்கிய 'போர்பே யெருத்தின்

கவையடி யவைத்த வுணாவே மருதின்

கொழுநிழற் குவைஇய குப்பையோ டனைத்தினும்

பலர்மகிழ் தூங்க வுலகுபுறந் தரூஉ

மாவண் சோணாட் டூர்தொறும்

ஏரோர் களவழி வாழிய நெடிதே.

79. அரண்

-ஆசிரிய மாலை

(‘பகைவராற் கைப்பற்றப்படாவாறும் கொள்ளையடிக்கப் படாவாறும் அழிக்கப்படாவாறும் நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகை அமைப்பு' - பாவாணர்.

இ. பெ.அ: திருக். 75)

1. நீர்வந்துகரையழிதரு.

2. தியக்கிய.

3. Cui 61.