உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

916.

புறத்திரட்டு

நட்டபின் நாடேல் குற்றமும் குணனும் குற்றமு மேனைக் குணனு மொருவனை நட்டபி னாடித் 'திரிவனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக.

பிறைபோல் வளரும் பெரியவர் கேண்மை

917. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு.

918.

919.

297

-நாலடியார் 230, 125

எவர்நட் பெனினும் ஏற்பது நலமே

தானட் டொழுகற்குத் தக்கா ரெனவேண்டா யார்நட்ப தாயினும் நட்புக் கொளல்வேண்டும் கானட்டு நாறுங் கதுப்பினாய் தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல்.

உறுகுறை மறையா தோதுக நட்பிடம்

தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்ப ரெனப்பட்டார்க் குற்ற குறையை யுரைப்பதாந் - தெற்ற அறையா ரணிவளையாய் தீர்த லுறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய்.

ஒன்றுக்குதவா ஒருபொருள் இல்லை

920. நன்றே யொருவற் றுணைக்கோடல் பாப்பிடுக்கண் ஞெண்டேயும் பார்ப்பான்கட் டீர்த்தலான் - விண்டோயுங் குன்றக நன்னாட கூறுங்கா லில்லையே

ஒன்றுக் குதவாத வொன்று.

1. திரிவெனேல்.

2. டீர்க்கலான்.