உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப்

பெருவரை கீண்டிடுந் திறல

திருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வ தீயுமிழ் தறுகணிற் சிறந்த.

-சீவகசிந்தாமணி 2154

83. நட்பு

(துன்புற்ற காலத்துத் துணையாளராகவும், தவறிய இடத்து இடித்துரைக்கும் உரிமையாளராகவும் விளங்கும் நட்பின் இயல்பு

கூறுதல்.

இ.பெ.அ: திருக். 79. பழமொழி. 14. ப.பா.தி. 55. நீதிக். 25.) மலர்ந்து கூம்பா மாண்புறு நட்பு

913.

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரு நட்பாரு மில்

இன்பொடு துன்பில் இணைந்ததே நட்பு

914. நறுமலர்த் தண்கோதாய்நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ - இறுமளவும் இன்புறுவ தின்புற் 'றெரீஇ யவரொடு

துன்புறுவ துன்புறாக் கால்.

நண்பரின் கடுஞ்சொல் நலமே விளைக்கும்

915. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் லுவந்துரைக்கும் ஏதிலா ரின்சொல்லிற் றீதாமோ - போதெலாம் மாதர்வண் டார்க்கு மலிகடற் றண்சேர்ப்ப ஆவ தறிவார்ப் பெறின்

1. ரிரீஇ.

-நாலடியார் 215, 209, 73