உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952.

புறத்திரட்டு

காட்டு நிலவால் கண்ட பயனென்?

தானகத்தா னட்டுத் தமரென் றொழுகியக்கால் நாணகத்துத் தாமின்றி நன்கொழுகா ராபவேல் மானமர்க் கண்ணி மறந்தும் பரியலராற் கானகத் துக்க நிலா.

மாடி ஏற்றி ஏணி களைதல்

953. எய்ப்புழி வைப்பா மெனப்போற்றப் பட்டவர் உற்றுழி யொன்றுக் குதவலராய்ப் பைந்தொடீஇ அச்சிடை யிட்டுத் திரியி னதுவன்றோ

'மச்சேற்றி யேணி களைவு.

பேதையர் நட்புப் பின்னின் னாவாம்

954. இடையீ டுடையர் ரிவரவரோ டென்று

தலையாயா 'ராய்தந்துங் காணார் - கடையாயார் முன்னின்று கூறுங்குறளை தெரிதலாற்

பின்னின்னா பேதையார் நட்பு.

305

-பழமொழி 139, 136, 138

மருவார் நட்பு விரைவாய் ஒழியும்

955. 3பெருகு வதுபோலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதுஞ் ‘செல்லாதே நந்து - மருகெலாஞ் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட பந்தமி லாளர் தொடர்பு.

சாந்துச் செப்பில் பாம்பு கண்டது

956. சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயிற் - சார்ந்தோய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்

பாம்பகத்துக் கண்ட துடைத்து.

-

-நாலடியார் 234, 126

2. ஆராய்ந்துங். 3. பெருகுவது போற்றோன்றி வைத்தீயே போல.

1. மச்செறி.

4. சொல்லாதே