உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

இளங்குமரனார் தமிழ் வளம் 17

86. தீநட்பு

(“தீய குணத்தாராகிய மாந்தரோடு நட்டதனால் வருங்குற்றங் கூறுதல்” - மணக்.

பெ.அ:திருக். 82.)

ஒருவரோ டொருப்படார் இருதலைக் கொள்ளி 948. பெரியநட் டார்க்கும் பகைவர்க்குஞ் சென்று திரிவின்றித் தீர்ந்தார்போற் சொல்லி யவருள் ஒருவரோ டொன்றி யொருப்படா தாரே இருதலைக் 'கொள்ளியென் பார்.

தம்மவர்க் குற்றதைத் தம்மதாய்க் கொள்க 949. தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற தெமக்குற்ற வென்றுணரா விட்டக்கா லென்னாம் இமைத்தருவி பொன்வரன்று மீர்ங்குன்ற நாட 2உமிக்குற்றுக் கைவருந்து மாறு.

தீமை யுடையார் திருந்திச் சேரார்

950. 3திருந்தாய்நீ யார்வத்தைத் தீமை யுடையார் வருந்தினா ரென்றே வயப்படுத்த லுண்டோ அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தாமண் ணாகா சுவர்.

951.

செத்தபின் செய்யும் சிறப்பினால் என்னாம்? பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத் தாக்கி யமருட் டலைப்பெய்யார் – போக்கி வழியரா நட்டார்க்கு மாதவஞ்செய் வாரே கழிவிழாத் 'தோளேற்று வார்.

2. உமிக்குற்றிக்.

1. கொள்ளியொப்.

3. திருந்தாத வார்வத்துத்.

4. தேரேற்று.

பழமொழி 141, 348, 110, 137