உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இன்னா தவரையும் பொன்னாய்ப் போற்றுக

943. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடொறு நாடித்தம்

இல்லத்தி லாக்குத லான்.

மதியார் தம்மையும் மதித்துப் போற்றுக

944. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயி னவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்மு ளடக்கிக் கொளல்

போற்றா விடினும் தூற்றா தமைக

945. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா வொழுக்க மொருவன்க னுண்டாயின் ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின் தூற்றாதே தூர விடல்.

பெரியவர் நட்பில் அரியவை பொறுப்பர் 946. பெரியார் பெருநட்புக் கோடல்தாஞ் செய்த அரிய 'பொறுப்பரென் றன்றோ - அரியரோ ஒல்லெ னருவி யுயர்வரை நன்னாட நல்லசெய் வார்க்குத் தமர்.

303

-நாலடியார் 226, 225, 229, 75, 77

நடுங்கும் வினையை நட்டவர் செய்யார்

947. மலைப்பினும் வாரணந் தாங்குங் குழவி

2

அலைப்பினும் அன்னேயென் 3றோடும் - சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யா ரொட்டார்

4உடனுறையுங் காலமு மில்.

-நான்மணிக்கடிகை 23

1. பொறுப்பவென்.

2.யுலப்பினும்

3. றோதும்.

4. உடனுறங்குங்.