உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கள்ள நட்பு, கறையாம் மனத்தில்

961. உள்ளத்தால் நள்ளா துறுதித் தொழிலராய்க்

கள்ளத்தால் நட்டார் 'கழிகிழமை - தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட மனத்துக்கண் மாசாய் விடும்.

307

நாலடியார் 127,231,128

88. பேதைமை

(“கேட்டிற்குக் காரணமாகியவற்றை அறியாதார் இயல்பு. கூறுதல்” - மணக்.

இ. பெ.அ: திருக். 84. நாலடி. 34. நீதிக். 33.)

அறிஞனுக் கிணையோ ஆயிரம் அறிவிலார் 962. ஆயிரவ ரானு மறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கல்லார் பாயிருள் நீக்கு மதியம்போற் பன்மீனுங் காய்கலா வாகு நிலா.

பெரியர் சிறப்பைச் சிறியர்க்குச் செய்யேல் 963. பெரியார்க்குச் செய்யுஞ் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு பூமே லிசைமுரலு மூர வதுவன்றோ நாய்மேற் றவிசிடு மாறு.

மூர்க்கற் குறுதி மொழிவது வீணே

964. ஓர்த்த கருத்து முலகு முணராத

மூர்க்கற் குறுதி மொழியற்க - மூர்க்கன்றான் கொண்டதே கொண்டு விடானாகு மாகாதே உண்டது நீலம் பிறிது.

1. கழிகேண்மை.

2. றவிசிட்ட வாறு.