உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இளங்குமரனார் தமிழ் வளம் 17

காவா தவரே கள்ளராச் செய்வார்

965. தெரியாதார் சொல்லுந் திறனின்மை தீதாப் பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொற் கொள்ளாது தாந்தம்மைக் காவா தவர்பிறரைக் கள்ளராச் செய்குறு வார்.

தங்குறை தீரார் பிறர்குறை தீர்த்தல்

966. தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கெங்கும் நீக்கற் கிடைப்புகுதல் - எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீரா தயல்வளி தீர்த்து விடல்.

பழமொழி 27, 105, 94, 117, 38

இயல்பிலா வெகுளியை இல்லிற் கடியேல்

967. சொல்லெதிர்ந்து தம்மை வழிபட் டொழுகலராய்க் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல் - உள்ளிருந் தச்சாணி தாங்கழிக்கு மாறு.

இரண்டுங் கெட்ட இயல்பினர் இவராம்

968. இல்வாழ்க்கை யானு மிலதானு மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுவுநின் - றெல்லாம்

ஒருதலையாச் சென்நு துணியா தவரே இருதலையுங் காக்கழிப் பார்.

-பழமொழி 112, 387

அறியாத் தன்மையால் அடுத்திடுங் கேடு

969. கல்லார்க் கினனா யொழுகலுங் காழ்க்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லஞ் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றம் அறியாமை யான்வருங் கேடு.