உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இழுக்கிய சொல்லன் இணையிலாப் பேதை 970. நண்பிலார் மாட்டு நகைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பின் இழுக்காய் சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கங் கடைப்பிடியா தார்.

971.

வாழு முயிர்க்கு வரையாப் பேதைமை

இருளாய்க் கழியு 'முலகமும் யாதுந்

தெருளா துரைக்கும் வெகுளியும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு.

கடைப்பி கருதார் இடர்ப்படு பேதையர்

972. கொலைநின்று தின்றுழல் வானும் பெரியவர் புல்லுங்காற் றான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன் றீயென் பவனை நகுவானு மிம்மூவர்

யாதுங் கடைப்பிடியா தார்.

309

-திரிகடுகம் 3, 94, 93, 74

விஞ்சிய பேதையர் நெஞ்சிடை நோயராம்

3.

973. பழியஞ்சான் வாழும் பசுவும் பரிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானுங் – 4கொண்டிருந் தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய்.

அறிவிலார் காதற் கமைந்த மூன்று

974. பெருமை யுடையா ரினத்தி னகறல்

உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை.

-திரிகடுகம் 79, 9

1. முலோபியும்.

2. வெகுள்வும். 1. அழிவினாற். 2. கொண்டிருந்த வில்லஞ்சி.