உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கழுவினால் பாலால் கரியும் வெளுக்குமோ? 975. பாலாற் கழீஇப் பலநா ளுணக்கினும் வாலிதாம் பக்க மிருந்ததைக் கிருந்தன்று கோலாற் கடாஅய்க் குறினும் 'புகலொல்லா தோலா வுடம்பிற் கறிவு.

நல்லவை கூறினால் நாவை அரிக்குமோ?

976. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டுங் - கறுவினாற் கோத்தின்னா கூறி யுரையாக்காற் பேதைக்கு நாத்தின்னு நல்ல சுனைத்து.

இருக்கும் நாளில் வெறுப்பும் இலையோ? 977. நல்லவை நாடொறு மெய்தா ரறஞ்செய்யார் 2இல்லாதார்க் கியாதொன்று மீகலார் – எல்லாம் இனியார்தோள் சேரா ரிசைபட வாழார் முனியார்கொல் தாம்வாழும் நாள்.

-நாலடியார் 258, 335, 338

பன்றிப் பத்தரில் தேமா வடிப்பது

978. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்காற் குன்றின்மேற் கொட்டுந் தறிபோற் 'றலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு.

வெந்நீர் உலையுள் விழைந்தா(டு) ஆமை

979. கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப யாமை நிலையறியா தந்நீர்ப் படிந்தாடி யற்றே

கொலைவல் பெருங்கூற்றம் கோட்பார்ப்ப வீண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

-நாலடியார் 257, 331

1. புகலொவ்வா.

2. இல்லாருக்.

3. றலைசிதர்ந்து.