உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தெண்ணீர் பரவும் எண்ணெயை ஈட்டல்

980. தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண் டீட்டற் கிவறுத லென்னொக்கும் பெண்மனம் பேதித் தொருப்படுப்பே னென்னும் எண்ணி லொருவ னியல்பெண்ணு மாறே.

குறிப்புக் காட்டிக் கூட்டம் விழைவார்

981. நீண்முகை கையாற் கிழித்தது மோக்குறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற் பேணலு மன்பும் பிறந்துழிப் பேதுசெய் தாணைப்பெண் ணைய வணைக்குறு மாறே.

89. புல்லறிவாண்மை

311

வளையாபதி 49, 50

("புல்லிய அறிவினை ஆடற்றன்மை என விரியும். அஃதாவது தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல் கொள்ளாமை" - பரிமே.

இ.பெ.அ: திருக். 85. நாலடி. 33. நீதிக். 32.)

காதலால் இட்டிகை கண்ணில் இடுவார்

982. மறுமையொன் றுண்டோ மனம்பட்ட தெல்லாம் பெறுமாறு செய்ம்மினென் பாரே - நறுநெய்யுட் கட்டி யடையைக் களைவித்துக் 'கண்செரீஇ இட்டிகை தீற்று பவர்.

பழமொழி 108

பேர்த்துத் தெருட்டல் பெரியோர்க் கியலா

983. நீர்த்தன் றொருவர் நெறியன்றிக் கொண்டக்காற் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கு மாகாதே

கூர்த்தநுண் கேள்வி யறிவுடையார்க் காயினும் ஓர்த்த படுமே பறை.

1. கண்சொரீஇ.

2. திசைக்கும்.