உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

எவர்க்கும் பொதுவாய் இணையும் இயல்பினர்

1043. ஊறுசெய் நெஞ்சந்தம் முள்ளடக்கி யொண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி

எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந் தமரல்லர் தம்முடம்பி னார்.

325

-நாலடியார் 373, 380, 378, 379

கூத்தி கூறிய குறிப்புரை இஃதால்

1044. யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோ லொழுகென்று கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை வேறோ ரிடத்து வெளிப்பட நன்றாம்.

அடைந்தவர்க் கேற்க அடைவே புரிக

1045. ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள் மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி யாவ 'ரடைந்தவர்க் கவையும் புரைப.

பொருளை அளந்து போகம் அளிப்பவர்

1046. வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி யறவறும் வார்புன லாற்றின் வகையும் புரைப.

பாண்மகற் கிசையும் யாழ்புரை தன்மையர்

1047. எங்ஙன மாகி யதிப்பொரு ளப்பொருட் கங்ஙன மாகி யவன்பின ராதலின்

எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற் கங்ஙன மாகிய யாழும் புரைப.

1. ரொருவ ரடைந்தாரெல்லாம்.