உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வேண்டி 'னின்னமு தாநஞ்சு மாதலான்

மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே.

-சீவகசிந்தாமணி 247, 245,254,249,250

93. பொதுமகளிர்

("நல்லார்தீயவர் என்னாமல் வரைவின்றிப் பொருள் கொடுப்பார் எல்லார்க்கும் பொதுப்பட்ட உடம்பினை உடையராகிக் குணத்தினாலன்றி வடிவினால் பெண்டிர் என்னும் வடிவுடையவர்' - தருமர்.

இ. பெ.அ: நாலடி. 38.

இ.சா.அ: திருக். 92. (வரைவின் மகளிர்))

கொடுப்பதொன் றின்றேல் விடுப்பரால் விரைந்து

1040. அங்கண் விசும்பி னமரர் தொழப்படுஞ்

செங்கண்மா லாயினு மாகமன் - தங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார் விடுப்பர்தங் கையாற் றொழுது.

பாவ உடம்பினர் பார்த்தும் தெளியார்

1041. உள்ள மொருவ னுழையதா வொண்ணுதலார் கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாம் - தெள்ளி அறிந்த விடத்தும் அறியாராம் பாவஞ் செறிந்த வுடம்பி னவர்.

செந்நெறிச் சேர்வார் சேரத் தகாவிடம்

1042. 'ஏமார்ந்த போழ்தி னினியார்போன் றின்னாராய்த் தாமார்ந்த போழ்தே தகர்க்கோடா - மானோக்கிற் றந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே

செந்நெறிச் சேர்துமென் பார்.

1. லின்னிமிர் துந்நஞ்சு.

2. ஏமாந்த.