உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

மேய்புலம் தேடும் மாவினை ஒப்பவர்

1053. வீபொரு ளானை யகன்று பிறனுமோர் மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலரன்ன கண்ணார்.

கொம்பிடை வாழும் குரங்கு போன்றவா

1054. நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.

வரிச்சிறை வண்டின் வகைமை கொண்டவர்

1055. முருக்கலர் போற்சிவந் தொள்ளிய ரேனும் 'பருக்கர டில்லவர் பக்க நினையார் அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

327

-வளையாபதி 57, 58, 59, 60, 61, 62

துய்த்துக் கழித்தல் தொடருங் கீழ்மை

1056. மக்கட் பயந்து மனையற மாற்றுதல் தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப பைத்தர வல்குற் £படிற்றுரை யாரொடு துய்த்துக் 3கழிப்பது தோற்றமொன் றின்றே.

நுகர்தற் கருமையால் நோயும் போல்பவர் 1057. நாயும் போல்வர்பல் லெச்சிலு நச்சலால் தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால் நோயும் போல்வர் நுகர்தற் கருமையால் வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.

1. பருக்காட்டிலவலர்.

2. படித்துறை.

3. களிப்பது.

ளையாபதி. 63