உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாண்பினர் செய்பிழை மதிக்கண் மறுவாம்

1108. விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார் 'கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப் 2பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மாறு.

வெண்ணிறப் பசுவிற் கருஞ்சூ டொப்பது

1109. நிரைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும் உரையொழியா வாகு முயர்ந்தோர்கட் குற்றம் மரையாகன் றூட்டு மலைநாட மாயா நரையான் புறத்திட்ட சூடு.

-பழமொழி 258, 79

தக்கார் போற்றும் தகுதிப் பொருள்கள்

1110. தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து 3வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றும் தாந்தம்மைக் கூறாப் பொருள்.

நல்லவர் கோளாய் நாட்டிய மூன்று

1111. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் 'செய்தமை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள்.

1112.

-திரிகடுகம் 8, 21

வரிசையால் உவப்பர் வளர்குடிச் சான்றோர்

ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் புல்லினா லின்புறூஉங் 'காலேயம் – நெல்லின்

2. பதிப்பட்ட. 5. காலேசம்.

3. வேந்துவப்பப் பட்டார்த்த.

1. கதிப்பட்ட 4. செய்தவை.