உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வழங்கித் துய்க்கான் வளத்தால் என் பயன்? 1136. வழங்கலுந் துய்த்தலுந் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப வதுவன்றோ நாய்பெற்ற 'தெங்கம் பழம்.

கண்ணிலி யொருவன் காணும் அழகு

2

1137. முழவொலி முந்நீர் முழுவது மாண்டோர்

3

விழவூரிற் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும் இழவென் றொருபொருளு மீயாதான் செல்வம் அழகொடு கண்ணி னிழவு.

இழிவுறு மாறே எய்திய செல்வம்

1138. தொன்மையின் மாண்ட துணிவொன்று மில்லாதார் நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர் கன்மே லிலங்கு மலைநாட மாக்காய்த்துத்

தன்மேற் குணில்கொள்ளு மாறு

347

பழமொழி 216, 217, 214

ஆடுபேய் விடுமோ அறைபறை கிடைத்தல்? 1139. அறியாமை யோடிளமை யாவதா மாங்கே செறியப் பெறுவதாஞ் செல்வஞ் - சிறிய பிறைபெற்ற வாணுதலாய் தானேயா டும்பேய் பறைபெற்றா லாடாதே பாய்ந்து.

உற்றார்க் குதவார் உறுபொருள் வீணே 1140. விரும்பி யடைந்தார்க்குஞ் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க் குதவல் இரும்பணைவில் வென்ற புருவத்தா யாற்றக் கரும்பனை யன்ன துடைத்து.

1. தெங்கின்.

2. முழுதுடன்.

3. வீந்தவிதல். 1139. இப் பாடல் பழமொழிப் பதிப்பில் இடம் பெற்றிலது.

-பழமொழி

பழமொழி 286