உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

1. தோற்றா.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கைக்குள் இருப்பினும் கருமியை அணுகார்

1141.

அருகுள தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வங் கருதுங் கடப்பாட்ட தன்று.

கள்ளிப் பூவும் கயவரும் ஒப்பர்

1142. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ வன்மையாற் செல்வம் பெரிதுடைய ராயினுங் கீழ்களை நள்ளா ரறிவுடை யார்.

ஈயார் செல்வம் ஏதிலார்க் குதவும்

1143. கொடுத்தலுந் துய்த்தலுந் 'தேற்றா விடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வ - மில்லத் துருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலன் துய்க்கப் படும்.

கடலரு காயினும் கருதுவ தூற்றே

1144. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும் வல்லூற் றுவரிற் கிணற்றின்கீழ்ச் சென்றுண்பர் செல்வம் பெரிதுடைய ராயினுஞ் சேட்சென்று நல்குவார் கட்டே நகை.

-நாலடியார் 261, 262, 274, 263

வேண்டார்க் குதவும் விரகிலாக் கீழ்கள்

1145. பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும் வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால் வண்மையு மன்ன தகைத்து.