உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இரவா வறியரே ஈடிலாச் செல்வர்

1146. ஓதியு மோதா ருணர்விலா ரோதாதும் ஓதி யனைய ருணர்வுடையார் - தூய்தாக நல்கூர்ந்துஞ் செல்வ ரிரவாதார் செல்வரும் நல்கூர்ந்தா ரீயா ரெனின்.

ஈட்டலும் காத்தலும் இயம்பொணாத் துன்பம் 1147. ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பங் - 'காத்தல்

குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பந் துன்பக் குறைபதி மற்றைப் பொருள்.

349

-நாலடியார் 269, 270, 280

மாயும் பொருளால் மாயா திடரே

1148. தீயாலோ நீராலோ தேர்வேந்தர் தம்மாலோ மாயாத தெவ்வர் வலியாலோ - யாதாலோ

இப்பொருள்போய் மாய்கின்ற தேன்றுபொருள் வைத்தார்கள் எப்பொழுதும் நீங்கா ரிடர்.

102. நாணுடைமை

-பாரதம்

(“சால்பு பண்பு முதலிய குணங்களான் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந் தன்மை” - பரிமே. இ.பெ.அ: திருக். 102. நீதிக். 7.)

தமரே புகழினும் தாழா தகற்றுக

1149. தமரேயுந் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தின்

அமரா ததனை யகற்றலே வேண்டும் அமையாரும் வெற்ப வணியாரே தம்மைத் தமவேயுங் கொள்ளாக் கலம்.

1. காத்த.

-பழமொழி 332