உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பிறர்புகழ் கூறிப் பெருமை கொள்ளேல்

1150. நச்சியார்க் கீயாமை நாணன்றாம் நாணாளும் அச்சத்தால் நாணுதல் 'நாணன்றாம் - எச்சத்தின் 2மெல்லிய "ராகித்தம் மேலாயார் 'செய்தது சொல்லா திருப்பது நாண்.

-நாலடியார் 299

103. குடிமரபு

(தொன்றுதொட்டு வந்த குடியின் சிறப்பினை உணர்ந்து அதனைக் குன்றாது உயரச் செய்தலின் முறைமை கூறுதல். இ.சா.அ: திருக். 103. (குடி செயல்வகை))

வேள்விச் சுடரோன் விறன்மிகுத் தன்று

1151. ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும் - ஏதஞ் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து.

இருநிலங் காவலன் இயல்புரைத் தன்று

1152. செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி மயிர்க்கண் முரச முழங்க - உயிர்க்கெல்லாம் நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க் காவலன் சேறல் கடன்.

வணிகர் செய்தொழில் வனப்புரைத் தன்று 1153. உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர் ஓதி யழல்வழிபட் டோம்பாத ஈகையான் ஆதி வணிகர்க் கரசு.

-புறப்பொருள் வெண்பாமாலை 161, 171, 164

1. நாணன்று.

2, 3. மெல்லியார்க் கீந்தது.

4. செய்ததும்.