உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

115. திறை

383

(பகைவேந்தர் பணிந்து திறை கொடுத்தலும், அதனைப் பெற்றுக்கொண்டு பெயர்தலும் திறையாகும் (திறை - கப்பம்).

மேற்: பு.வெ.மா. 52, 124.)

வாழுமா றெழுதுவார் வானவர் வில்லே

1285. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்மின் மல்ல னெடுமதில் வாங்குவிற் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வர் விசும்பு.

இமையார் திருந்தடி ஏனோ மிதியார்?

1286. நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவல னாணையால் ஏம மணிப்பூ ணிடையார் திருந்தடி பூமி மிதியாய் பொருள்.

இறையோ என்பவர் முறையோ என்றார்

1287. நிறைமதிபோல் யானைமேல் நிலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் - திறைகொள் இறையோ வெனவந் திடம்பெறுத லின்றி முறையோ வெனநின்றார் மொய்த்து.

வீழ்ந்து வணங்கிட வெம்புண் பட்டதாம்!

1288. நின்றீமின் மன்னீர் நெருநற் நிறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க- இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே பெருந்தண் 'ணுறந்தையார் கோ.

-முத்தொள்ளாயிரம் 13, 14, 15, 16

1. மரந்தையார்.