உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

இளங்குமரனார் தமிழ் வளம் 17

செழுவளச் சிந்தையை உருக்கும் சிதைவு

1283. தேஎர் பரந்தபுல மேஎர் பரவா

களிறா டியபுலம் நாஞ்சி லாடா

மத்துர றியமனை யின்னிய மிமிழா

ஆங்கப், பண்டுநற் கறியுநர் செழுவளம் நினைப்பின் நோகோ யானே நோதக வருமே பெயல்மழை புரவின் றாகி வெய்துற்று வலனின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் பீரிவர் வேலிப் பாழ்மனை நெஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் உரும்பில் கூற்றத் தன்னநின் திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.

-பதிற்றுப்பத்து 26

களிற்றின் கந்தாம் கடிமரம் தடியேல்

1284. வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சால் மாற நின்னொன்று கூறுவ துடையே னென்னெனில் நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க நனந்தலைப் பேரூ ரெரியுண நைகுக

'மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉங்

கடிமரந் தடித லோம்புநின்

நெடுநல் யானைக்குக் 'கந்தாற் றாவே.

1. மின்னு நிம்ர்ந்.

2. கந்தொற்.

-புறநானூறு 57