உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

செங்கண் சிவக்கக் கரிபரந் தெழுந்தது

1278. கரிபரந் தெங்கங் கடுமுள்ளி பம்பி

நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த

பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு.

ஊரை அறியா உலைவு பட்டது

1279. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேலைபூத் தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு.

ஊமன் பாட உறங்கும் குழவி

1280. இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற வரியிளஞ் செங்காற் குழவி - அரையிரவின் ஊமன்பா ராட்ட புறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு.

1281.

கூகை பாடக் கூத்திடும் பேய்கள்

வாகை வனமாலை சூடி யரசுறையும் ஓகை 'யுயர்மாடத் துள்ளிருந்து கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு.

எவரும் போக இருந்தது பேயே!

1282. 'பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையி னுய்யாதார் தேயம் - முறைமுறையின் ஆன்போ யரிவையர்போ யாடவர்போ 3யாயின்றே ஈன்பே யுறையு மிடம்.

381

-முத்தொள்ளாயிரம் 8, 9, 10, 11, 12

1. யுறைமாடத்.

2. பறைநின்ற.

3. யாயீன்ற ஈன்போ.