உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை 1275. வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமாத் தேரொடு சுரந்து

நன்கல னீயும் நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடி'யாய் பகைவெம் மையி னசையா வூக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு மாறா மைந்தர் மாறுநிலை தேய

மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து

கடாஅ யானை முழங்கும்

இடாஅ வேணிநின் பாசறை யானே.

-பதிற்றுப்பத்து (விடுபகுதி 4)

114. பகைப்புலம் பழித்தல்

(பகைவர் நாட்டின் அழிபாடு குறித்துப் பழித்துக் கூறுதல். புலம் - நாடு. பகைப்புலம் அழித்தல் என்பதும் பாட வேறுபாடு.

மேற். பு.வெ. மா. 59, 60.)

சுரையும் பீருஞ் சுமந்த மாடம்

1276. குரையழல் மண்டிய கோடுயர் மாடஞ்

சுரையொடு பீரஞ் சுமந்த - நிரைதிண்டேர்ப்

பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப நல்லிசை கொண்டடையார் நாடு.

கண்கள் சேந்தன கடிய விளிவர்

1277. தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவால் பாழாய்ப் பரிய 2விளிவதுகொல் - யாழாய்ப் புடைத்தே னிமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு.

-புறப்பொருள் வெண்பாமாலை 60, 43

1. ஆய்பகை வெம்மையி.

2. விழுவதுகொல்.