உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஐங்கணைத் தோற்றம் அழிக்கும் பாசறை 1271. மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடை மாதர்பாற் பெற்ற 'வலியுளவோ - கூதிரின்

வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற வழிவு.

படையின் ஒலியிற் பாணொலி மிக்கது

1272. மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி யமர்க்களங்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னார் உ உடையன தாம்பெற் றுவந்து.

புகலுஞ் சொல்லால் புண்ணும் ஆறுமே!

1273. தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன

புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்.

379

பரும்பொருள் விளக்கம்

கொடைக்கடன் தீர்க்கப் படைக்கடன் செய்தோன்

1274. குழிபல வாயினுஞ் சால்பா னாதே

முழைபடு முதுமரம் போலெவ் வாயு

மடைநுழைந் தறுத்த விடனுடை விழுப்புண்

நெய்யிடை நிற்ற லானாது பையென

மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர் கொடைக்கட னாற்றிய வேந்தர்க்குப் படைக்கட னாற்றிய புகழோன் புண்ணே.

-தகடூர்யாத்திரை

1. வலியளவோ.