உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

இளங்குமரனார் தமிழ் வளம் 17 செலவுபெரி தினிதுநிற் காணு மோர்க்கே இன்னா தம்ம தானே பன்மாண்

நாடுகெட வெருக்கி நன்கலந் தரூஉநின்

'போரருட் கடுஞ்சின மெதிர்ந்து

மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே.

-பதிற்றுப்பத்து 83

113. பாசறை

(போர்க் காலத்தில் வேந்தனும் வீரரும் தங்குதற்கெனக் களத்தருகே அமைக்கப் பெறுவது பாசறையாம். கட்டூர், என்பதும்

இது.

மேற். தொல். பொருள். 76. பு.வெ.மா. 53, 56)

கட்டூ ரகத்துக் காட்சி யுரைத்தது

1268. அவிழ்மலர்க் கோதையா ராட வொருபால் இமிழ்முழவம் யாழோ டியம்பக் - கவிழ்மணிய காய்கடா யானை யொருபாற் களித்ததிரும் ஆய்கழலான் கட்டூ ரகத்து.

பகைவரை மெலிக்கும் பாசறைத் தங்கல் 1269. கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய்திறந்த பின்னுஞ் - சுரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பகைமெலியப் பாசறையு ளான்.

வெஞ்சினம் பெருகும், வேந்துமேற் செல்ல 1270. மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல் இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங்கெரிபோல் வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற் செல்லப் பெருகுஞ் சினம்.

-புறப்பொருள் வெண்பாமாலை 53, 56, 59

1. போரடுங்.