உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கூடார் வந்தபின் கொள்க வாட்கோள்

1263. உணங்கு புலவறா வொன்னார் குரம்பை 'நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய குந்த மலியும் புரவியான் கூடாதார் வந்தபின் செல்கென்றான் வாள்.

குன்றூர் குருதி யாறாய் ஆகுமோ?

1264. பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் - கருதி மறத்திறத்து மாறா மேறவருங் கொண்டார் 3புறத்திறுத்த 4வேந்திரியப் பூ.

விடலைக்கு வெங்கள் விடுவாள் முதியள்

1265. ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள் விடலைக்கு வெங்கள் விடும்.

ஆர்த்த பகைவரைப் பேர்த்த கழலான்

1266. கடிகமழ் வேரிக் கடைதொறும் செல்லக் கொடிமலி கொல்களி றேவித் - 'துடிமகிழ ஆர்த்திட் டமரு ளடையாரை வெம்முனையிற் பேர்த்திட்டான் பெய்கழலி னான்.

377

-புறப்பொருள் வெண்பாமாலை 61, 64, 67, 70, 81, 85

இனியை நுமர்க்கே இன்னாய் பகைக்கே

1267. கார்மழை முன்பிற் 'கைபரந் தெழுதரும் வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி 'யவிர்வரப் பொலிந்து

1. நுணங்கிய.

2. மறவருங்கொண் டார்த்தார்.

3. புறத்திறத்து.

4. வேந்தீயப்.

5. துடியுகள்.

6. கைபரிந்.

7. விரவப்.