உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வணங்கா வலியர் வையகத் துளரோ?

1260. இருங்கண் யானையொ டருங்கலந் 'தெறுத்துப் 2பணிந்துகுறை மொழிவ தல்லது பகைவர் வணங்கா ராதல் 3யாவதோ ‘மற்றே

யுருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரல் முரசமொடு கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முனை

எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து

நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி

நீர்துனைந் தன்ன செலவின்

நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே.

-பதிற்றுப்பத்து (விடுபகுதி 1)

112. எதிரூன்றல்

(நாடு கொள்ளுமாறு வந்த வஞ்சியாரைத் தாக்குதற்கு எதிர்நிற்றல் எதிரூன்றல் ஆகும். இவர் 'காஞ்சி'ப் பூச்சூடுவராகலின் `து ‘காஞ்சி' எனப் பெயர் பெறும்.

து

மேற்: பு.வெ.மா. 61. “உட்காது, எதிரூன்றல் காஞ்சியாம்” வீரசோ. பொருள். 21. மேற்.)

அமரிலை என்றால் அருவரை பாய்தும்

1261. அருவரை ‘பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப் பெருவரைச் சீறூர் கருதிச் செருவெய்யோன் காஞ்சி மலையக கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில்.

தொல்குடி மகார்க்குத் தொடுகலம் தந்தான் 1262. ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப வையிலைவே லெஃக மவைபலவு - மொய்யிடை ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான் வாட்குடி வன்க ணவர்க்கு.

3. யாவதே.

1. துறுத்துப்

4. மற்றை.

2. பணிந்து. 5. யாய்ந்தடுது.

6. வையிலை யெஃகம்.