உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

திரும்பி வந்து தருவேன் என்னான்!

1257. வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்தினர்க் 'கீத்துமென் றெண்ணுமோ - பாத்திப் புடைக்கல மான்றே ருடனீத்தா னீத்த படைக்கலத்திற் சாலப் பல.

நாரரிக் காக நல்லுயிர் ஈவோர்

1258. உண்டியின் முந்தா னுடனுண்டான் தண்டேறல் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடா ரோர்ந்து

375

-தகடூர் யாத்திரை

இதுநீ எண்ணின் எதிர்ப்போர் எவரே?

1259. அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ 2முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல் ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத் தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு வடபுல மன்னர் வாட வடல்குறித்

தின்னா வெம்போ ரியறேர் வழுதி

இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்

தியார்கொ லளியர் தாமே யூர்தொறு மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரி னொரீஇ யினியே கலிகெழு 3கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூ தாளர் நாயிடக் குழிந்த வல்லி 4னல்லக நிறையப் பல்பொறிக் கான வாரண மீனுங்

காடாகி விளியு நாடுடை யோரே.

புறநானூறு 52

1. கீதுமென்

2. முழங்கு நிமிர். 3. மூதூர்க்கந்து. 4. னில்லக.