உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் குஞ்சி மலைந்தானெங் கோ.

-புறப்பொருள் வெண்பாமாலை 36

குடைநாட் கொள்ள உடைநாள் உலந்தன

1253. முன்னர் 'முரசியம்ப மூரிக் கடற்றானைத் துன்னருந் துப்பிற் றொழுதெழா மன்னர்

உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக் குடைநா ளிறைவன் கொள.

மாலையும் மதியமும் கூகை ஒலிக்கும்

1254. அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னர் எறிந்திலங் கொள்வா ளியக்க - மறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நண்பகலுங் கூகை நகும்.

-

-புறப்பொருள் வெண்பாமாலை 38, 39

ஒருபாற் படவும் இருபாற் படுவதேன்

1255. விண்ணசைஇச் செல்கின்ற வேலிளைய ரார்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் முள்ளம் இருபாற் படுவ தெவன்.

பார்ப்புர வெண்ணான் பார்த்திபன் என்னே!

1256. போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ

2பார்ப்புர 3வெண்ணான்கொல் பார்வேந்தன் - ஊர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிப்ப நீளிடைப்

புல்லார்மேற் செல்லும் பொழுது.

-பெரும்பொருள் விளக்கம்

1. முரசிரங்க.

2. பார்ப்புற.

3. மெண்ணான்கொல்.