உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நெறிதர.

புறத்திரட்டு

கற்சிறை போலக் கலங்காத் திட்பம்

1317. வேற்றானை வெள்ள 'நெரிதர யாற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லா லெளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுந ரென்னுஞ் செருக்கு.

உற்றுழி உதவார் இளையர் ஆவர்

1318. பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற் குற்றுழிச் சாவா தவர்.

தலைவன் ஆதலால் தரித்திலேன் நின்நா 1319. பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா

இரவே யெறியென்றா யென்னை - விரைவிரைந்து வேந்தனீ யாயினா யன்றிப் புகுவதோ

போந்தென்னைச் சொல்லிய நா.

விலங்கை வெல்வது வீரம் அன்றுகாண்!

1320. வான்வணங்கி யன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும் விலங்கா லொருகைத்தால் வெல்கைநன் றென்னும் நலங்காணே னாணுத் தரும்.

1321.

காலாள் என்று காலாள் எறியான்

காலாளாய்க் காலா ளெறியான் களிற்றெருத்தின் மேலா ளெறியான் மிகநாணக் காளை கருத்தினதே யென்று களிறெறியா னம்ம தருக்கினனே சான்றோர் மகன்.

393

-தகடூர் யாத்திரை