உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

இளங்குமரனார் தமிழ் வளம் 17

119. எயில் கோடல்

(பகைவர் மதிலைப் பற்றிக் கொள்ளுதல் (எயில் - மதில். கோடல் - கொள்ளுதல்) இவ்வீரர் உழிஞைப் பூச் சூடுவராகலின் இஃது உழிஞை எனப் பெயர் பெறும்.

மேற்: தொல். பொருள். 65; 67. பு.வெ.மா. 95. “உழிஞை அது வளைத்தல்” வீரசோ. பொருள். 21. மேற்.)

உழிஞை சூடி ஒன்னார் மதில்கொளல்

1322. உழிஞை 'முடிபுனைந் தொன்னாப் போர் மன்னர் விழுமதில் வெல்களிறு பாயக் - கழிமகிழ் வெய்தாரு மெய்தி யிசைநுவலுஞ் சீர்த்தியனே கொய்தார மார்பினெங் கோ.

ஏணி பலவும் எயில்மேல் சார்த்தல்

1323. கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும் விற்பொறியும் வேலும் விலங்கவும் - பொற்புடைய பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சார்த்தினார் ஏணி பலவு மெயில்

உதிரா மதிலும் உண்டோ எங்கும்?

1324. கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல் - அதிருமால்

பூக்கள் மலிதார்ப் புகழ்வெய்யோன் - கோயிலுள் மாக்கண் முரச மழை.

-புறப்பொருள் வெண்பாமாலை 95, 112, 98

பாலன மதியம் பகலில் எறிக்குமோ?

1325. பசுலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி இகலரணத் துள்ளவ ரெல்லாம் - அகலிய

விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சும்பிளித்தார் கண்.

1. முடிபுனைந்த தொன்னார் போர்.